அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் விவகாரத்தில் நிதியமைச்சகம் போதிய முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை என பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ஊழலுக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஹாங்காங்கில் உள்ள வெளிநாட்டு கிளப்பில் சுப்பிர மணியன் சுவாமி பேசியது:
முன்னேற்பாடுகள் இல்லாமல் இந்நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஓடிவிட் டன. முதல் நாளில் இருந்தே இந்த விவகாரத்தை எப்படி கையாள்வது என்ற ஏற்பாடு களில் நிதியமைச்சகம் ஈடுபட்டிருந் தால், மக்களுக்கு அசவுகரியங்கள் ஏற்பட்டிருக்காது. முந்தைய காங்கிரஸ் அரசு ரூபாய் நோட்டு களை அச்சிடுவதற்கான காகிதங் களை வாங்கும் ஒப்பந்தத்தை லண்டனைச் சேர்ந்த நிறுவனத் துக்கு வழங்கியது. இந்நிறுவனம் பாகிஸ்தானுக்கும் காகிதங்களை வழங்கியது. இது இந்திய கள்ள நோட்டுகளை பாகிஸ்தான் செல வில்லாமல் அச்சடிக்க வாய்ப்பாக அமைந்துவிட்டது என்றார்.