இந்தியா

உத்தரபிரதேசத்தில் சர்ச்சையில் சிக்கிய மருத்துவமனையை இடிக்க நோட்டீஸ்

செய்திப்பிரிவு

பிரயாக்ராஜ்: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில், உள்ள தனியார் மருத்துவமனையில், சமீபத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்ட பிரதீப் பாண்டே என்பவருக்கு ரத்த தட்டணுக்களுக்கு பதிலாக சாத்துக்குடி சாறு ஏற்றியதாகவும், இதனால் பிரதீப் பாண்டே இறந்ததாகவும் அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் சர்ச்சையில் சிக்கிய தனியார் மருத்துவமனை சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்பதால், அதை புல்டோசர் மூலம் இடிப்பது தொடர்பாக மருத்துவமனைக்கு பிரயாக்ராஜ் மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்துள்ளது. இதற்கு நாளைக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும், பதில் திருப்திகரமாக இல்லையென்றால், மருத்துவமனை புல்டோசர் மூலம் இடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT