கோவாவில் பாஜக எம்.எல்.ஏ. விஷ்ணு வாக் செவ்வாய்க்கிழமை வேட்டி அணிந்து சட்டசபைக்கு வந்தார்.
பிகினி உடை (நீச்சல் உடை) இந்திய கலாச்சாரம் அல்ல. எனவே அவற்றை கோவா கடற்கரையில் அணிய தடை விதிக்க வேண்டும் என்று மாநில அமைச்சர் சுதின் தவாலிகர் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விஷ்ணு வேட்டியில் வந்தார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சிலர் இந்திய கலாசாரம் குறித்துப் பேசுகின்றனர். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் அதனை கடைப்பிடிப்பது கிடையாது. நிச்சயமாகவே அவர் (தவாலிகர்) நமது கலாச்சாரத்தின் மீது அக்கறை உடையவராக இருந்தால், தின மும் வேட்டி அணிய வேண்டும். மற்றவர்களுக்கு போதனை செய்வது எளிதானது. நாம் அதை வாழ்க்கையில் கடைபிடிப்பது தான் கடினம்.
நான் எனது கலாச்சாரத்தால் பெருமையடைகிறேன். நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத் தொடர் முழுவதும் நான் வேட்டி அணிந்துதான் வருவேன் என்றார்.