வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பை உடனடியாக நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக தொடரப்பட்ட பொது நல மனுவை விசாரித்த உயர் நீதி மன்றம், இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எடுக்கும் முடிவின் அடிப்படையிலேயே தீர்ப்பளிக்க முடியும் எனக் கூறியுள்ளது.
500, 1000 ரூபாய் தாள்கள் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வங்கிக் கணக்கில் இருந்து வாரத் துக்கு, ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என வரம்பு நிர்ண யிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இம்முடிவு பெரும்பாலான மக்களின் வாழ்வா தார உரிமையை பறிக்கும் வகையில் இருப்பதால், இவ் விஷயத்தில் இடைக்கால நிவாரணமாக உச்ச வரம்பை நீக்க உத்தரவிடக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
டெல்லியைச் சேர்ந்த அசோக் சர்மா தாக்கல் செய்த இம்மனு, தலைமை நீதிபதி ஜி.ரோகினி மற்றும் நீதிபதி வி.கே.ராவ் ஆகி யோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மைத்ரி, ‘மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணை யில், வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு குறித்து கூறப்பட்டுள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கை மேற் கொண்ட நவம்பர் 8-ம் தேதிக்கு முன்பு வரவு வைக்கப்பட்ட தொகைக்கு இந்த உச்ச வரம்பு பொருந்தாது.
மனுதாரரால் தொழில் நடவடிக் கைகளை மேற்கொள்ள முடிய வில்லை. அவரைப் போலவே பெரும்பாலான மக்களின் வாழ் வாதார உரிமைகள் பறிக்கப்பட் டுள்ளது’ என வாதிட்டார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், ‘இது தொடர்பான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. வரும் 25-ம் தேதி (நாளை) இவை விசாரணைக்கு வரும். உச்ச நீதிமன்றம் என்ன நிலைப்பாடு எடுக்கிறது எனப் பார்ப்போம். அதன்பிறகு தான், எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என முடிவெடுக்க முடியும்’ எனக் கூறினர்.