இந்தியா

உ.பி. ரயில் விபத்து: என்டிஆர்எப் படை வீரர்கள் 200 பேர் மீட்புப் பணியில் தீவிரம்

பிடிஐ

உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் (என்டிஆர்எப்) சேர்ந்த 200 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.

மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பின்னர் இது தொடர்பாக என்டிஆர்எப் தலைவர் ஆர்.கே.பச்நந்தாவை தொடர்புகொண்டு பேசினார்.

இதையடுத்து, சுமார் 200 வீரர்கள் அடங்கிய 5 என்டிஆர் குழுக்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் இந்தப் பணிகளை என்டிஆர்எப் இயக்குநர் ஜெனரல் கண்காணித்து வருகிறார். சேதமடைந்த பெட்டிகளுக்கு இடையே சிக்கி உள்ளவர்களை உயிருடன் மீட்க இக்குழுவினர் முயன்று வருகின்றனர். இதுவரை 53 பயணிகளை இவர்கள் மீட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT