இந்தியா

மத்திய பட்ஜெட்: ரூ.2,037 கோடியில் கங்கையை மேம்படுத்த திட்டம்

செய்திப்பிரிவு

கங்கையை பாதுகாக்கும் ஒருங்கிணைந்த திட்டத்துக்காக, மத்திய பட்ஜெட்டில் ரூ 2.037 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின், 2014-15 ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.

அப்போது, "நமாமி கங்கா (போற்றுதலுக்குரிய கங்கை) என்ற கங்கை நதியைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் ஒருங்கிணைந்த திட்டத்துக்காக ரூ.2,307 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதுவரையில் நதிகளை சுத்தப்படுத்தும் பணிகளுக்காக ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அவை அனைத்தும் எதிர்பார்த்த அளவில் பலன் தரவில்லை.

நாட்டின் முக்கிய வாழ்வாதாரமாக கருதப்படும் கங்கையை அழிவிலிருந்து மீட்க வேண்டும். கங்கை நதியின் பாதுகாப்புக்காக வெளிநாடுவாழ் இந்தியர்களின் நிதிகளும் செலவிடப்பட உள்ளது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும், பிரதான நதிகளை பாதுக்கவும் நதிக்கரைகளை மேம்படுத்தும் திட்டம் அவசியமானது.

கேதார்நாத், ஹரித்வாரா, கான்பூர், வாரணாசி, அலகாபாத், பாட்னா, டெல்லி ஆகிய இடங்களில் உள்ள நதிக்கரைகள், வரலாற்று பாரம்பரியம் கொண்டதாக மட்டும் இல்லாமல், புனித இடங்களாகவும் திகழ்கின்றன.

மேலும், நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்ய ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதற்காக வெளிநாட்டு நிதி உதவியை வரையறைப்படுத்த திட்டம் வகுக்கப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT