ஹைதராபாத்தில் ரம்ஜான் சமயத்தில் பரபரப்பாக விற்பனையாகும் ஹலீம்.(கோப்புப் படம்) 
இந்தியா

அதிக புகழ்பெற்ற உணவாக ஹைதராபாத் ‘ஹலீம்’ தேர்வு

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: இந்திய உணவு வகைகளில் புகழ்பெற்ற ரசகுல்லா, பிகானரி புஜியா, ரட்லாமி சேவ் உள்ளிட்ட 17 உணவு வகைகளில் ஹைதராபாத்தின் ‘ஹலீம்’ அதிக புகழ்பெற்ற இந்திய உணவாக புவிசார் குறியீடு வென்றுள்ளது.

மத்திய வர்த்தக அமைச்சகம் சார்பில் நடைபெற்ற வாக்கெடுப்பில் உணவு பிரிவில் இந்த விருது ஹைதராபாத் ஹலீமுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 9-ம் தேதி வரை, இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இதற்கான வாக்கெடுப்பு மக்களிடையே நடத்தப்பட்டது. இதில், ஹைதராபாத் ஹலீம் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றது.

ரம்ஜான் நோன்பு சமயத்தில் ஹலீம் மிகவும் விரும்பி உண்ணும் உணவாகும். ஆட்டிறைச்சியை மைய அரைத்து, அதில், கோதுமை மாவு கலவையில், சில பருப்பு வகைகளும், மிளகாய் போன்ற கார வகைகளும் சேர்ந்து ஒரு தனி சுவையுடன் வழங்கப்படும் உணவே ஹலீம் ஆகும்.

SCROLL FOR NEXT