பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா வில் உள்ள நாபா சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புகுந்த மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தி சிறையில் அடைக் கப்பட்டிருந்த காலிஸ்தான் விடுதலை முன்னணி தலைவர் ஹர்மிந்தர் சிங் உட்பட 6 கைதிகளை மீட்டுச் சென்றனர். இதில் ஹர்மிந்தர் சிங், பர்மிந்தர் சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் நாபா சிறை தாக்குதல் சம்பவம் தொடர்பாக அந்த சிறையின் துணை கண்காணிப்பாளர் பீம் சிங், தலைமை வார்டன் ஜக்மித் சிங், பெட்டிக் கடைக்காரர் தேஜந்தர் சர்மா ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.