இந்தியா

காஷ்மீரில் செல்பேசி இணைய சேவைகளுக்கான தடை நீக்கம்

ஐஏஎன்எஸ்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் போஸ்ட் பெய்டு செல்பேசி இணைய சேவைகளுக்கான தடை நீக்கப்பட்டு சனிக்கிழமை முதல் மீண்டும் இயங்குகின்றன.

போலீசாரால் ஜூலை 9 அன்று நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில், ஹிஸ்புல் இயக்கத்தின் தீவிரவாதி புர்கான் வானி கொல்லப்பட்டார். இதையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

அதைத் தொடர்ந்து மொபைல், இணையம் உள்ளிட்ட தகவல் தொடர்பு சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இப்போது மீண்டும் போஸ்ட் பெய்டு மொபைல் இணைய சேவைகள் இயங்க ஆரம்பித்துள்ளன. தற்போதைய காஷ்மீரின் சூழ்நிலையும், ஒட்டுமொத்த சட்ட ஒழுங்கும் முறையாக உள்ளதா என்று ஆய்வு செய்த பிறகு, ப்ரீபெய்டு சேவைகள் மீண்டும் இயக்கத்துக்கு வரும் என்று உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT