இந்தியா

எல்லையில் படைகள் விழிப்புடன் இருக்க ராணுவ தளபதி அறிவுறுத்தல்

பிடிஐ

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லை நிலவரம் குறித்து ராணுவத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது எதிரிகளின் செயல்பாடு களுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு படையினரை அவர் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, “உதம்பூரில் உள்ள, ராணுவத்தின் வடக்கு படைப்பிரிவு தலைமை அலுவலகத்துக்கு ராணுவத் தளபதி தல்பீர் சிங் நேற்று வருகை தந்தார். கமாண்டர்களுடன் அவர் கள் ஆலோசனை நடத்தினார். எல்லை நிலவரம் குறித்தும் உள் நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் எதிரிகளின் செயல்பாடு களுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், எதிரிகளின் தாக்குதலுக்கு முனைப்புடன் பதிலடி தருமாறு கேட்டுக்கொண்டார்” என்றார்.

காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவத்தின் தாக்குதலில் 7 பாகிஸ்தான் வீரர்கள் இறந்ததாக அந்நாடு நேற்று முன்தினம் கூறியது. இந்நிலையில் எல்லை யில் பாகிஸ்தானின் அத்து மீறலுக்குத் துணிவுடன் பதிலடி கொடுத்துவரும் ராணுவ வீரர்களை சுஹாக் பாராட்டியதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

எல்லையில் பாக். அத்துமீறல்

இதனிடையே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜவுரி மாவட்டம், சுந்தெர்பாணி செக்டார், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இந்திய ராணுவ நிலைகளை குறித்து நேற்று காலை 7.10 மணிக்கு தொடங்கிய இத்தாக்கு தல் முற்பகல் 11 மணி வரை நீடித்தது. தானியங்கி துப்பாக்கி யால் சுட்டும் பீரங்கி குண்டுகளை வீசியும் இத்தாக்குதல் நடத்தப் பட்டது. இதற்கு ராணுவம் பதிலடி கொடுத்தது.

இதுதவிர ஜம்மு மாவட்டம், பல்லன்வாலா பகுதியிலும் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தின.

SCROLL FOR NEXT