திரிபுரா மாநிலம் அகர்தலா ரயில் நிலையத்தில் அகர்தலா-கொல்கத்தா, அகர்தலா கோங்சங் ஜனசதாப்தி ரயில் சேவை தொடக்க நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.படம்: பிடிஐ 
இந்தியா

கொல்கத்தா-அகர்தலா இடையே விரைவு ரயில் சேவையை தொடங்கினார் குடியரசுத் தலைவர்

செய்திப்பிரிவு

அகர்தலா: கொல்கத்தா-அகர்தலா இடையிலான விரைவு ரயில் சேவையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திரிபுரா மற்றும் அசாம் மாநிலங்களில் குடியரசுத் தலைவர் மேற்கொண்டுள்ள சுற்றுப் பயணம் இன்றுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், திரிபுரா மாநிலத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கொல்கத்தா-அகர்தலா இடையேயான விரைவு ரயில் சேவையை முதல்வர் மாணிக் சகாவுடன் இணைந்து குடியரசுத் தலைவர் முர்மு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதேபோன்று, மணிப்பூரின் கோங்சாங் வரை செல்லும் சதாப்தி விரைவு ரயில் சேவையையும் முர்மு தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு, காணொலி காட்சி மூலம் பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். அசாம் மாநிலத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை, பெட்ரோலியம்-இயற்கை எரிவாயு, ரயில்வே உள்ளிட்ட மத்திய அமைச்சகங்களின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு காணொலி மூலம் முர்மு அடிக்கல் நாட்ட உள்ளார்.

தேயிலை தோட்ட பகுதிகளில் மாதிரி அங்கன்வாடி மையங்கள், 100 மாதிரி மேல்நிலைப் பள்ளிகள், கவுகாத்தி அக்தோரி முனையத்தில் நவீன கார்கோ மையம் உள்ளிட்டவற்றையும் குடியரசுத் தலைவர் இன்று திறந்து வைக்கவுள்ளார்.

SCROLL FOR NEXT