நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை பெரும்பாலான தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர்.
ரபீக் அகமது (இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு):
அனைத்து வித வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு வழிகாட்டும் பட்ஜெட் இது. சாலைகள், மின்சாரம் உள் ளிட்ட உள்கட்டமைப்பு மீதான அறிவிப்புகள் இந்திய உள்கட்டமைப்பு வசதிகளை சர்வதேச தரத்துக்கு கொண்டு செல்லும். சுங்க இலாகாவின் பணி, 24 மணி நேரமும் 13 துறைமுகங்களில் அமல்படுத்த இருப்பதும் வரவேற்புக்குரியது.
ஜவஹர் வடிவேலு (தென் இந்திய தொழில் வர்த்தகசபை):
பொருளாதார நிதிப் பற்றாக் குறையை 3.7 சதவீதத்திலிருந்து, மூன்று சதவீதமாக குறைப்போம் என்று அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. அனைத்து மின் நிறுவனங் களுக்கும் நிலக்கரி உறுதியளித் திருப்பது, மூன்று தொழிற்சாலை காரிடார் விரிவாக்கம் போன்றவை வரவேற்புக்குரியது.
விக்கிரமராஜா (தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு):
வணிக மற்றும் தொழில் துறைக்கு இந்த பட்ஜெட் திருப்தி அளிக்கவில்லை. ஆனால் தொலை நோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் டாக உள்ளது. சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே ஜிஎஸ்டி சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
டி.கே.ஜெயகோபால் (சிறு தொழிற்சாலைகளுக்கான தேசியக் கூட்டமைப்பு துணைத் தலைவர்):
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கியிருப்பது வரவேற்கத் தக்கது. பாதுகாப்புத் துறைக்கான தளவாடங்களை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் சாலை களிலிருந்து வாங்குவதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.