குருநானக் ஜெயந்தியை முன் னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதி களில் நேற்று வங்கிகள் மூடப்பட்ட தால் ஏராளமான பொதுமக்கள் ஏடிஎம்களை முற்றுகையிட்டனர். ஆனால், ஒரு சில மணி நேரங் களிலேயே ஏடிஎம்களில் பணம் தீர்ந்துபோனதால் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
பெரும்பாலான ஏடிஎம்கள் செயல்படாமல் உள்ள நிலையில், பணம் நிரப்பப்பட்ட ஒரு சில ஏடிஎம் இயந்திரங்களிலும் சில மணி நேரத்தில் ரூபாய் நோட்டுகள் இல்லாமல் தீர்ந்துவிடுகின்றன.
அன்றாட செலவினங்களுக் காக அதிகாலையில் இருந்தே ஏடிஎம் வாசலில் கால் கடுக்க காத் திருக்கும் பொதுமக்கள் கொதிப் படைந்து, பணியாளர்களுடன் தகராறில் ஈடுபடுவது, பல இடங்களில் நடக்கிறது.
சிறுதொழிலில் ஈடுபடுவோர், வர்த்தகர்கள், உணவகங்கள் நடத்துவோர், ஆட்டோ, ஷேர் ஆட்டோ மற்றும் வாடகை வாகனங் களை இயக்குவோர் என பலதரப் பட்ட மக்களும் பணத்தட்டுப்பாடு காரணமாக விரக்தியான மன நிலையில் உள்ளனர்.
தட்டுப்பாட்டைச் சமாளிக்க புதிதாக அச்சடிக்கப்பட்ட 500 ரூபாய் தாள்களை அரசு வெளி யிட்டாலும், ஏடிஎம்கள் இயங்காத தால், அவை இன்னும் மக்களுக்கு போய் சென்றடையவில்லை.
ஒரே சமயத்தில் கூட்டம் அதிகளவில் குவிந்துவிடுவதால் நிலைமையை சமாளிக்க முடியா மல் வங்கிகளும் திணறுகின்றன. வயது முதிர்ந்தவர்களும், மாற்றுத் திறனாளிகளும் கூட்ட நெரிசலில் அவதிப்படுவது குறித்து சுட்டிக் காட்டப்பட்ட பிறகே, அவர்களுக் கான சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வங்கிகளுக்கு அரசு உத்தர விட்டுள்ளது.