இந்தியா

ஐ.நா. முக்கிய பொறுப்புக்கு மற்றொரு இந்தியர் தேர்வு

பிடிஐ

வழக்கறிஞர் அனிருத்தா ராஜ்புத்தைத் தொடர்ந்து, மற்றுமொரு இந்தியர் ஐ.நா. சபையின் முக்கிய பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் நிதிநிலை மற்றும் நிர்வாக விவ காரங்களுக்கான ஆலோசனைக் குழு உறுப்பினராக இந்தியாவைச் சேர்ந்த மகேஷ்குமார் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். ஐ.நா. பொதுச் சபையில் நடைபெற்ற தேர்தலில் ஏகோபித்த ஆதரவுடன் அவர் தேர்வு செய்யப்பட்டார்.

ஐ.நா.வுக்கான நிரந்திர இந்திய தூதுக்குழுவில் முதல்நிலை செயலாளராக பொறுப்பு வகித்து வரும் மகேஷ் குமாருடன், ஜப்பானின் தகேஷி அகமட்சு மற்றும் சீனாவின் யி ஸியுனாங் ஆகியோரும் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். ஆசிய பசிபிக் நாடுகளுக்கான இக்குழுவில் மூவரும், வரும் ஜனவரி மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை பதவியில் நீடிப்பார்கள்.

ஐ.எஃப்.எஸ் அதிகாரியான மகேஷ்குமார், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் எம்ஃபில் முடித்தவர். டெல்லி தவிர, பிரஸ்ஸல்ஸ், டெல் அவிவ், ரமல்லா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணி அனுபவம் பெற்றுள்ளார்.

SCROLL FOR NEXT