இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கத்தின் சுருக்கமே சிமி. ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பின் மாணவர் பிரிவாக சிமி செயல்படுகிறது. முஸ்லிம் இளைஞர்களின் நலனுக்காக பாடுபடும் நோக்கத்துடன் 1980-களில் இந்த அமைப்பு ஆரம் பிக்கப்பட்டது. பின்னர் ஏனோ அந்த நோக்கத்தில் இருந்து திசைமாறிச் சென்றது.
குரான் அடிப்படையில் மனித வாழ்க்கையை நிர்வகிப்பது, இஸ்லாத்தை பரப்புவது, அதன் நலனுக்காக ஜிஹாத்தை ஏற்பது என்ற 3 கொள்கைகளின் அடிப் படையில் சிமி இயங்குகிறது. தவிர, மேற்கத்திய கொள்கைகள், மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் தேசியத்தை எதிர்ப்பதும் சிமியின் முக்கிய கொள்கைகளாக உள்ளன.
எப்போது தொடங்கப்பட்டது
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகரில் 1977, ஏப்ரல் 25-ல் சிமி இயக்கம் உருவானது. முகமது அகமதுல்லா சித்திக்கி என்பவர் தான் இதன் நிறுவன தலைவர். இவர் இல்லினாய்ஸில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத் தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் பேராசிரி யராக பணியாற்றியவர்.
சிமிக்கு தடை
1992-ல் பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நிகழ்ந்தபோது, சிமி இயக் கத்தினர் பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனால் 2001-ல் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிமி இயக்கம் மீது தடை விதிக்கப்பட் டது. பின்னர் 2008-ல் சிறப்பு தீர்ப் பாயம் அந்தத் தடையை விலக் கியது.
எனினும் தேசப் பாதுகாப் புக்கு அச்சுறுத்தல் எழுந்ததால் அதே ஆண்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பால கிருஷ்ணன் மீண்டும் சிமிக்குத் தடை விதித்தார்.
சிமி இயக்கத்தின் முக்கிய தலைவர்களான சப்தார் நகோரி, அவரது சகோதரர் கம்ரூதீன், சிப்லி, அமில் பர்வேஸ் ஆகி யோரை மத்தியப் பிரதேச போலீ ஸின் சிறப்பு படைப் பிரிவு 2008, மார்ச்சில் கைது செய்தது.