(கோப்புப்படம்) 
இந்தியா

பாஜக எம்.பி.யின் கோரிக்கையை ஏற்று 'திப்பு எக்ஸ்பிரஸ்' பெயர் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு

இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடகாவில் திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாடுவதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், பாடத் திட்டத்தில் திப்பு குறித்து உள்ள பாடங்களை நீக்கவும் கோரி வருகின்றனர்.

இந்நிலையில் மைசூரு - குடகு பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா, மைசூரு - பெங்களூரு இடையேயான திப்பு சுல்தான் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயரை மாற்ற வேண்டும் என ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ரயில்வே, திப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயரை ‘உடையார் எக்ஸ்பிரஸ்' என மாற்றியது.

இதற்கு காங்கிரஸ், மஜத ஆகிய எதிர்க்கட்சியினர், ‘‘முஸ்லிம் மன்னரான திப்பு சுல்தானின் பெயரைநீக்கும் நோக்கத்திலேயே பாஜகசெயல்படுகிறது'' என விமர்சித்துள்ளனர். முஸ்லிம் அமைப்பினரும் இந்த பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறும்போது, ‘‘மைசூரை ஆண்ட உடையார் மன்னர் ரயில்வே கட்டமைப்புக்கு செய்த உதவியை கவுரவிக்கும் விதமாகவே பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் அரசியல் இல்லை'' என விளக்கம் அளித்துள்ளார்.

SCROLL FOR NEXT