500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பால் விலைவாசி மற்றும் வங்கிகளின் வட்டி விகிதம் குறையும் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறியுள்ளார். இது குறித்து அவர் ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
500, 1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடை மூலம் மத்திய அரசு எதிர்பார்த்த பலன் கிடைக்கத் தொடங்கியுள்ளதா?
வங்கிகள், ஏடிஎம்களுக்கு நான் நேரில் சென்று பார்த்தேன். எனது தொகுதியிலும் பலரிடம் கருத்து கேட்டேன். ஒருவர் கூட என்னிடம் மத்திய அரசின் அறிவிப்பை எதிர்ப்பதாகக் கூறவில்லை. இதன் மூலம், கறுப்புப்பணம், ஊழல், கள்ளநோட்டு, தீவிரவாத செயல் களுக்கான உதவி ஆகியவற்றுக்கு முடிவு கட்ட மக்கள் விரும்பு கின்றனர்.
இந்த அறிவிப்பில் சிலர் உள் நோக்கத்துடன் புரளி கிளப்பி யுள்ளனர். இவை அடங்கிய பின் மக்களுக்கு பலன் கிடைக்கத் தொடங்கிவிடும். உதாரணமாக, நாட்டின் பொருளாதாரத்தின் பல துறைகள் நல்ல லாபம் ஈட்டி வருகின்றன. ஆனால் இதன் கணக்குகள், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) இடம்பெறு வதில்லை. அவை கணக்கில் வரத் தொடங்கிவிட்டதால் இந்தியப் பொருளாதாரத்தின் அளவு விரிவடையத் தொடங்கி விட்டது.
எவ்வளவு கறுப்புப் பணம் வெளியாகும் என அரசு எதிர் பார்க்கிறது?
ஐடிஎஸ் (Income Declaration Scheme)-ல் தான் எங்களுக்கு கறுப்புப் பணம் மீதான இலக்கு இருந்தது. இது கடந்த அக்டோபர் 29-ம் தேதியுடன் முடிந்து விட்டது. ஆனால், இந்த அறிவிப்பில் கறுப்புப்பணம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு ஆகும்.
500, 1000 ரூபாய் கள்ள நோட்டு கள் வங்கி உட்பட பல்வேறு பரி வர்த்தனையில் ஊடுருவியதாகக் கூறப்படுவது உண்மையா? அதன் மதிப்பு சுமாராக எவ்வளவு?
இவ்வாறு ஊடுருவிய கள்ள நோட்டுகள் முழுமையாக ஒழிக் கப்பட்டு விட்டன. நமது நோட்டு களின் முக்கிய அம்சங்களை தீவிரவாத அமைப்புகள் திருடி கள்ள நோட்டுகள் அச்சடித்தது முடிவுக்கு வந்துள்ளது. இனி புதிய நோட்டுகளின் முக்கிய அம்சங்களை திருடுவது முடியாத காரியம்.
2000, 500 ரூபாய் புதிய நோட்டுகளால் மீண்டும் கறுப்புப் பணம் உருவாகும் எனப் புகார் எழுந்துள்ளதே?
இந்த விஷயத்தில் ஊழல்வாதி கள் மற்றும் கறுப்புப்பணம் சேர்ப்பவர்களின் மனநிலையை குறி வைத்து அரசு அடித்துள்ளது. இவர்கள் தங்களின் தவறான மனப்போக்கை மாற்றிக்கொள்வது அவசியம். இனி புதிதாக ஒரு முறைகேடு செய்தால் அதையும் தடுக்க மோடிஜி மற்றொரு திட்டம் அமலாக்குவார் என்ற அச்சம் அவர்களிடம் உருவாகியுள்ளது. இதனால், தவறு செய்வோர் திருந்தி வாழும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே மனம் மாறியவர்கள் இனி கறுப்புப் பணத்தை சேர்க்க மாட்டார்கள்.
நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு சிறு வியாபாரிகளை குறி வைத்து செய்யப்பட்டதா?
எங்கள் அறிவிப்பால் நாட்டில் வியாபாரப் பரிவர்த்தனை அதிக மாகி, அனைவருக்கும் பலன் கிடைக்கும். குறிப்பாக இந்த அறி விப்புக்கு பிறகு சிறிய வியாபாரி கள் கணக்கில் வரும்படியான வியாபாரம் செய்யத் தொடங்கி விட்டனர். கணக்கில் வராத வியாபாரம் முடிவுக்கு வரும்போது விலைவாசி மிகவும் குறையும். வங்கிகளில் போதுமான அளவுக்கு பணம் சேர்ந்து, கடன் எளிதாகக் கிடைக்கும். அதன் வட்டி விகிதம் குறைந்து சிறு வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
இந்த அறிவிப்பால் ரியல் எஸ்டேட் தொழில் பாதிக்குமா?
ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் சட்டத்தை ஏமாற்றுவோர் அதிகம். இனி அவ்வாறு செய்ய முடியாது. இதுவரை சொந்த வீடு குறித்து யோசிக்காதவர்களும் இனி வீடு வாங்கும் நிலை உருவாகும்.
அர்த்தகிராந்தி அமைப்பின் மற்ற கோரிக்கையான, வருமான வரி உட்பட அனைத்துக்கும் பதிலாக வங்கி வரி அறிமுகப்படுத்த இருப்பதாக செய்தி உலவுகிறதே?
அர்த்த கிராந்தியின் யோசனை களை நாம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த நாட்டில் இதுவரை வந்த திட்டங்களால் செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர் களாகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும் மாறி வந்தனர். இதை தடுத்து நிறுத்துவதே எங்கள் அறிவிப்பின் நோக்கம்.
தங்கம் பதுக்குவோர் மீது கட்டுப்பாடுகள் வருமா?
தங்கம் பதுக்கப்படுவதன் மீது அரசு கணக்கெடுப்பு நடத்தி யுள்ளது. இவர்கள் மீது அதிரடி சோதனைகளும் நடைபெற்று வருகிறது. தங்கம் வாங்கினால் பான் கார்டு தேவைப்படும் நிலை உள்ளது. இதனால், தங்கத்தின் விலையில் சரிவும் ஏற்பட்டுள்ளது.
சீன பொருட்களை பாஜக எதிர்க்கிறது. ஆனால், அந்நாட்டு நிதி நிறுவனமான ‘Paytm’ மூலமாக பணப் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்துவது ஏன்?
சீனப் பொருட்கள் மீதான எதிர்ப்பு கொள்கை பாஜகவினுடையது மட்டுமல்ல, நாட்டு மக்கள் அனைவருக்குமானது. Paytm-ஐ பொறுத்தவரை நாம் தற்போது உலகமயமாக்கல் சூழலில் வாழ் கிறோம். இதில், இந்தியர்களின் உரிமைகளை எங்கள் அரசு நிச்சயம் கவனத்தில் கொள்ளும்.
தேவையான முன்னேற்பாடு கள் இன்றி இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படு கிறதே?
இது மிகவும் தவறான கருத்து. நம் நாட்டில் வங்கி மற்றும் ஏடிஎம் களுக்கு பற்றாக்குறை இல்லை. போதுமான அளவுக்கு உள்ளது. புதிய அறிவிப்பால் இவற்றில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் இந்த சிரமங்கள் குறைந்து நல்ல முன்னேற்றம் தெரியும்.
உ.பி. உட்பட வரவிருக்கும் ஐந்து மாநில தேர்தலை மனதில் வைத்து இந்த அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து?
தேர்தல்களுக்கும் இந்த அறிவிப்புக்கும் தொடர்பு இல்லை.
இந்தப் பிரச்சினை முடிந்து இயல்பு நிலை எப்போது திரும்பும்?
மிக விரைவில் இயல்புநிலை திரும்பி விடும். இதில் தேதியை குறிப்பிட்டுக் கூற முடியாது.
வங்கி மற்றும் ஏடிஎம்களில் வரிசையில் நின்ற பொதுமக்களில் சிலர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு இழப்பீடு அளிக்க முன்வருமா?
இதுபோன்ற சம்பவங்களை மாநில அரசுகள் விசாரித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளித்தால் இழப்பீடு குறித்து ஆலோசிக்கப் படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.