இந்தியா

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய போர்க்கப்பல்: ‘ஐஎன்எஸ் சென்னை’ நாட்டுக்கு அர்ப்பணிப்பு

செய்திப்பிரிவு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய ‘ஐஎன்எஸ் சென்னை’ போர்க் கப்பல் நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

மும்பையில் உள்ள மஸாகான் டாக் கப்பல் கட்டுமான நிறுவனத்தில், ‘ஐஎன்எஸ் சென்னை’ போர்க்கப்பல் உருவாக்கப்பட்டது. இதன் நீளம் 164 மீட்டர். மேலும், 7,500 டன் எடை கொண்டது.

எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் சக்தியுடன் ஐஎன்எஸ் சென்னை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ‘‘ஐஎன்எஸ் சென்னை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த நாள், இந்திய கப்பற்படை வரலாற்றில் மிக முக்கியமான நாளாகும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா மற்றும் உயரதிகாரிகளும் பங் கேற்றனர்.

இதுகுறித்து கப்பற்படை அதிகாரிகள் கூறும்போது, ‘‘இதற்கு முன்னர் ‘ஐஎன்எஸ் சென்னை’ போல வேறு எந்தப் போர்க் கப்பலும் பெரிய அளவில் தயாரிக்கப்படவில்லை. இந்தக் கப்பலின் 60 சதவீத பணிகள் மஸாகான் டாக் நிறுவனத்திலேயே முடிக்கப்பட்டது. கப்பலில் பொருத் தப்பட்ட ஆயுதங்கள், சென்சார் கருவிகள் இஸ்ரேல் மற்றும் ரஷ்ய நாட்டிடம் இருந்து வாங்கி பொருத்தப்பட்டுள்ளன. வரும் 2027-ம் ஆண்டுக்குள் 200 போர்க் கப்பல்களுடன் இந்திய கப்பற் படையை பலமுள்ளதாக உரு வாக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றனர்.

55 கி.மீ. வேகத்தில் செல்லும்

அதிநவீன ‘ஐஎன்எஸ் சென்னை’ போர்க் கப்பல் 30 கடல் மைல் வேகத்தில் (மணிக்கு 55 கி.மீ.) செல்லக் கூடியது. இக்கப்பல் மேற்கு கடற்படை கட்டுப்பாட்டு தலைமையின் கீழ் இயங்கும். பாது காப்புப் பணியில் இக்கப்பலை ஈடுபடுத்துவதற்கு முன்னர், கடலில் மேலும் சில ஒத்திகைகளை பார்க்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தக் கப்பலில் தரையில் இருந்து தரை இலக்கை தாக்கி அழிக்கும் ‘பிரம்மோஸ்’ ஏவு கணை, தரையில் இருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் ‘பராக்-8’ ஏவுகணை ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. அதே போல் நீர்மூழ்கி கப்பலில் இருந்து தாக்கினாலும் அதை எதிர்க்கொண்டு அழிக்கும் திறன் படைத்தது. இந்தக் கப்பலின் பிரத்யேக சின்னத்தில், நீலநிறக் கடலும் பின்னணியில் வரலாற்று சிறப்புமிக்க சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையும் இடம்பெற்றுள்ளன.

SCROLL FOR NEXT