அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லைக்கு அருகில் நேற்று ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள். படம்: பிடிஐ 
இந்தியா

அருணாச்சலில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் விமானி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

குவாஹாட்டி: அருணாச்சல பிரதேசத்தில் பூடான் மற்று சீன எல்லையை ஒட்டி தவாங் மாவட்டம் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் சீன எல்லைக்கு அருகில் இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை 10 மணியளவில் பயிற்சியின் போது திடீரென விழுந்து நொறுங்கியது. இதில் விமானிகள் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களில் சவுரவ் யாதவ் என்ற விமானி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு விமானி சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து ஆராயப்பட்டு வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

ராணுவத்தின் மற்றொரு சீட்டா ஹெலிகாப்டர் கடந்த மார்ச் மாதம் ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் விபத்துக்குள்ளானது. இதில் ஒரு விமானி உயிரிழந்தார். மற்றொரு விமானி காயம் அடைந்தார்.

SCROLL FOR NEXT