இந்தியா

வரிவிலக்குகளால் பல கோடிகளில் பலனடைந்த பெரும் நிறுவனங்கள்: சிஏஜி அறிக்கை தாக்கல்

செய்திப்பிரிவு

ரிலையன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு சில ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரிவிலக்கு அளித்ததாக தலைமை தணிக்கைக் குழு (CAG) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில் ரிலையன்ஸ் நிறுவனம் பெரிய அளவில் பயனடைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் ஆதாரபூர்வமாக கூறப்பட்டுள்ளது. முறையற்ற விதத்தில் அளிக்கப்பட்ட வரிவிலக்குகளினால் ரிலையன்ஸ் நிறுவனம் 2006-07 - 2011-12 காலக்கட்டத்தில் ரூ.5,245.38 கோடி கூடுதல் பயனடைந்துள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“இரண்டு மாநிலங்களில் ஒரு 8 சந்தர்பங்களில் நாங்கள் கண்டுபிடித்ததாவது: தனியார் பயன்களுக்காக செய்யப்பட்டுக் கொண்ட கட்டுமான பணிகள் (ரயில்கிளைப்பாதை அமைப்பு, துறைமுக சரக்கு மேடை கட்டுமானங்கள் உள்ளிட்ட வசதிகள்) மீது அவர்கள் ஈட்டிய லாபத்திலிருந்து வரி விலக்குகள் சில நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது இவை சட்ட விதி 80 I-ஏ(4)-ன் விளக்கங்களின் படி உள்கட்டுமான வசதிகளாக கொள்ள முடியாதது. இந்த சந்தர்ப்பங்களில் முறைக்கு புறம்பான விதத்தில் வரி விலக்கு அல்லது கழிவுகள் அளிக்கப்பட்டுள்ளது அதாவது ரூ. 2,066.7 கோடி ரூபாய்க்கு வரியிலிருந்து கழிவு அனுமதிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் போர்ட் அண்ட் டெரிமினல்ஸ் நிறுவனத்திற்கு 2007-07 முதல் 2011-13 வரை மொத்தமாக ரூ.5,245 கோடி வரை வரித்தொகையிலிருந்து கழிவு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கழிவுகளுக்கான தகுதி உள்ளதா என்ற அளவுகோல்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இந்த வரிக்கழிவுகள் வழங்கப்பட்டுள்ளன” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 28, 1999-ல் குஜராத்தில் ரிலையன்ஸின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அருகேயுள்ள சிக்கா துறைமுகத்தில் ரிலையன்ஸ் குழுமத்திற்குச் சொந்தமான தொழிற்சாலை கச்சாப்பொருட்களை இறக்கி ஏற்ற வசதியாக சரக்கு மேடை உள்ளிட்டவற்றை அமைக்க ரிலையன்ஸ் நிறுவனத்துடன் குஜராத் மரிடைம் வாரியம் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டது.

“இந்த கட்டுமானங்கள் அந்த நிறுவனம் தங்களது சொந்த உபயோகத்திற்காக பயன்படுத்திக் கொண்டது, பொதுப்பயன்களுக்கானதல்ல, எனவே அதில் விலக்குகள், கழிவுகள் அளித்திருப்பது முறையல்ல. இதனால் ரூ.5,245 கோடி அளவுக்கு பயனடைந்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம், இதற்கான வரி சுமார் ரூ. 1.766 கோடியாகும்”

இதற்கு வருமான வரித்துறை கூறும்போது, சட்டப்பிரிவு 80 IA-ன் கீழ் ‘பொது பயன்பாடுகள்’, ‘தனியார் பயன்பாடுகள்’ என்ற வேறுபாடு இல்லை என்று கூறிய விளக்கத்தை தலைமை தணிக்கைக் குழு ஏற்க மறுத்துள்ளது.

இதே போல் ஆதித்தியா பிர்லா குழுமத்தின் எஸ்ஸெல் சுரங்க நிறுவனத்திற்கு அதன் சொந்த உபயோகத்திற்கான கட்டுமானங்களுக்கு எதிராக 2010-2013 முதல் ரூ.73 கோடி விலக்கு அளித்துள்ளது. சட்டப்பிரிவு 80IA-ன் படி தனிப்பயன்களுக்கான உபயோகத்திற்கு வரி விலக்கோ, சலுகையோ அளிக்கக் கூடாது என்று தலைமை தணிக்கைக் குழு தனது அறிக்கையில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT