ஜம்முவின் ராஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் இன்று (சனிக்கிழமை) இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலுக்கு இந்திய தரப்பில் வலுவான பதிலடி அளிக்கப்பட்டது.
இது குறித்து பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை 10.30 மணியளவில் ரஜோரி மாவட்டம் நவுசேரா செக்டார் பகுதியில் பீரங்கி குண்டுகளைக் கொண்டு இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலுக்கு இந்திய தரப்பில் வலுவான பதிலடி அளிக்கப்பட்டது. இந்திய தரப்பில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை" என்றார்