பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை மிரட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் 22 வயதான கல் லூரி மாணவி 6 பேர் கும்பலால் காரில் கடத்தப்பட்டு கத்தி முனை யில் பலாத்காரம் செய்யப்பட் டார். இதுகுறித்து மாணவி புகார் அளிக்க சென்றபோது புலிகேசிநகர் இன்ஸ்பெக்டர் முகமது ரபிக் வழக்கு பதிவு செய்ய மறுத்துள்ளார்.
இந்த விஷயம் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஹைதர் நசீர் (26) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
எப்.ஐ.ஆர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய மறுத்த இன்ஸ்பெக்டர் முகமது ரபிக் மீது நடவடிக்கை கோரி மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட் டுள்ளன. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த மாணவி பெங்களூர் போலீஸ் கமிஷனர் ராகவேந்திரா அவ்ராத்கரை சந்தித்து முறையிட்டார். இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முகமது ரபிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக அரசு அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட் டுள்ளது.