பிறந்த 24 மணி நேரத்தில் குழந்தைகளை பிஸ்கட் அட்டைப்பெட்டியில் வைத்து கடத்தி விற்பனை செய்யும் அவலம் கொல்கத்தா அருகே நிகழ்ந்து வந்துள்ளது. இது தொடர்பாக தனியார் மருத்துவ மனை உரிமையாளர் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தா அருகே 24 பர்கானாசில் உள்ள பதுரியா என்ற ஊரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் குழந்தைகள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
தனியார் மருத்துவமனையில் போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். மருத்துவ உபகரணங்களை வைக்கும் அறை ஒன்றில் பிஸ்கட் வைக்க பயன்படும் அட்டைப்பெட்டி களில், சற்று முன்னர் பிறந்த 3 பிஞ்சுக்குழந்தைகள் சுற்றி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
அக்குழந்தைகளைப் பத்திர மாக மீட்ட போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் மேலும் பல தகவல்கள் தெரிய வந்தன. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது,
‘திருமணமாகாத இளம் பெண்கள் கருவைக் கலைக் காமல் குழந்தையைப் பெற்றுக் கொடுக்க, இம்மருத்துவமனை சார்பில் கணிசமான தொகை வழங்கப்படுகிறது. ஆண் குழந் தைக்கு ரூ.3 லட்சமும், பெண் குழந்தைக்கு ரூ.2 லட்சமும் தருகின்றனர்.
இதுபோன்ற விலை பேசப் பட்ட குழந்தைகள் தனியார் மருத்துவமனையில் பிறந்த சில மணி நேரங்களில் பிரசவத் துக்கு பிந்தைய பராமரிப்புக்காக அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் படும். பின்னர் அங்கிருந்து குழந் தைகள் கடத்தப்பட்டு விற்கப்படும்.
வெளிநபர்களுக்கு மட்டு மின்றி, மருத்துவமனைகளில் இறந்து பிறக்கும் குழந்தை களுக்கு மாற்றாக ஆரோக்கிய மான நிலையில் இருக்கும் இதுபோன்ற குழந்தைகளை விற்பதும் நடந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த சட்டவிரோத வேலை நடந்து வந்துள்ளது
இதுவரை 25-க்கும் அதிக மான குழந்தைகள் இதுபோல விற்கப்பட்டுள்ளன. இதில், தனி யார் மருத்துவமனை உரிமை யாளருக்கும், பணியாளர்களுக் கும், ஒரு என்ஜிஓ அமைப்புக்கும் தொடர்பு உள்ளது. தற்போது, மருத்துவமனை உரிமையாளர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது’ என்றார்.