பாகிஸ்தான் அத்துமீறலால் ஜம்மு மாவட்டத்தில் சர்வதேச எல்லையருகே மூடப்பட்ட பள்ளிகளை இன்று முதல் திறக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல் லைக்கு அப்பாலிருந்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்ததால், ஜம்மு மாவட்டத்தில் சர்வதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள 174 பள்ளிகளும் கடந்த 1-ம் தேதி மூடப்பட்டன.
இந்நிலையில் ஜம்மு போலீஸ் துணைக் கமிஷனர் சிம்ரன்தீப் சிங் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, ‘174 பள்ளிகளையும் மூடுவது தொடர்பாக நவம்பர் 1-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது. நாளை (15-ம் தேதி) முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்’ என்றார்.
பாகிஸ்தான் தாக்குதல் தற் போது குறைந்துவிட்டதா என்பது குறித்து அவர் தகவல் வெளியிட வில்லை. எனினும், கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இந்தியப் படையினர் துல்லியத் தாக்குதல் நடத்திய பிறகு, இது வரை 286 முறை கட்டுப்பாட்டு எல் லைக் கோட்டருகே, பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஜம்மு பகுதியில் உள்ள 190 கிமீ தொலைவிலான சர்வதேச எல்லையில் 186 முறையும், 500 கிமீ தொலைவிலான கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே 104 முறையும் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கடந்த 1-ம் தேதி ஜம்மு காஷ் மீரின் 5 செக்டார்களுக்கு உட் பட்ட பகுதிகளிலும், பொது மக்களை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் ஷெல் குண்டுகளை வீசியதில், 4 பெண்கள், 2 குழந்தை கள் உட்பட 8 பேர் பலியாகினர். இதர நாட்களில் நடந்த தாக்குத லில், 14 ராணுவ வீரர்களும், பொது மக்கள் 4 பேரும் பலியானார்கள்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே, இந்திய படையினர் எல்லைக்கு அப்பால் இருந்த 14 பாகிஸ்தான் முகாம்களைத் தாக்கி அழித்தனர். அப்போது எல்லைப் பகுதியில் நடந்த கடுமையான துப்பாக்கிச் சூடு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தீவிரவாதி பலி
ராணுவ அதிகாரி ஒருவர் கூறும் போது, “நவ்காம் செக்டார் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். சம்பவ இடத் தில் இருந்து ஒரு துப்பாக்கி கைப் பற்றப்பட்டது” என்றார்.