அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்வோம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஒவைசியும் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் நேற்று நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சுவாமியும் ஒவைசியும் பங்கேற்று தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். தொலைக்காட்சி செய்தியாளர் ராஜ்தீப் சர்தேசாய் கலந்துரையாடலை வழிநடத்தினார்.
அப்போது அயோத்தி ராமர் கோயில் விவகாரம் தொடர்பாக விவாதம் எழுந்தது. சுப்பிரமணியன் சுவாமி கூறியபோது, ‘‘நான் வன்முறையை ஆதரிக்கவில்லை. சட்டத்துக்கு உட்பட்டு நடப்பதையே வலியுறுத்தி வருகிறேன். ராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வேன்’’ என்றார்.
ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதின் ஒவைசி பேசியபோது, ராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நானும் ஏற்றுக்கொள்வேன். உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங் களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக தேர்தலை சந்திக்கும் மாநிலங்களில், பசுவதை, பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பிரச்சினை கள் எழுப்பப்படுகின்றன’’ என்று குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் கூறியபோது ‘இந்துத்துவா வாக்கு வங்கிக் காக மட்டுமே’ என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாக வீக்கிலீக்ஸ் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள் ளது என்று தெரிவித்தார்.
அப்போது ஒவைசிக்கு ஆதரவாகப் பேசிய சுப்பிர மணியன் சுவாமி, விக்கிலீக்ஸ் ஆவணத்தில் அப்படித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது என்று ஆமோதித்தார். பல்வேறு விவகாரங்களில் ஒவைசியுடன் காரசாரமாக மோதிய சுவாமி, அருண் ஜேட்லி விவகாரத்தில் மட்டும் ஆதரவாகப் பேசினார்.