இந்தியா

சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து அறிக்கை கோரினார் சுகாதார அமைச்சர்

செய்திப்பிரிவு

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து அறிக்கை அளிக்குமாறு எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநருக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உத்தரவிட்டுள்ளார்.

சுனந்தா புஷ்கர், கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி டெல்லி லீலா ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

சுனந்தாவின் மரணத்தில் மர்மம் நீடித்த நிலையில் அவர் மரணம் இயற்கையானதே என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துமனை பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சுனந்தாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் குழுவின் தலைவராக இருந்த சுதிர் குப்தா, 'சுனந்தா இயற்கை மரணம்' அடைந்தார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடுமாறு தன்னை சிலர் கட்டாயப்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மத்திய சுகாதார துறை அமைச்சகத்திற்கு புகார் மனுவும் அனுப்பியுள்ளார்.

இதன் அடிப்படையில், சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து அறிக்கை அளிக்குமாறு எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநருக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT