இந்தியா

கூகுள் மீதான புகார்: சிபிஐ முதல்கட்ட விசாரணை

செய்திப்பிரிவு

இணைய உலகின் ஜாம்பவான் கூகுள் நிறுவனம் மீது இந்திய தலைமை நில அளவையாளர் அளித்த புகாரின் பேரில் சிபிஐ முதல்கட்ட விசாரணை மேற்கொள்ள உள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கூகுள் மேப் நிறுவனம் இந்திய மக்களிடம் வரைபடப் போட்டி நடத்தியது. இதன் மூலம் தடை செய்யப் பட்ட, நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் வரைபடங்களை கூகுள் பெற்றுள்ளதாகவும், இந்த விவரங்கள் அமெரிக்க நிறுவனத்துடன் பகிர்ந்துகொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் மத்திய உள்துறை அமைச்சகத் துக்கு இந்திய தலைமை நில அளவையாளர் (சர்வேயர் ஜெனரல் ஆப் இந்தியா) புகார் அனுப்பியிருந்தார். இந்தப் புகாரின் பேரில் சிபிஐ முதல்கட்ட விசாரணை மேற்கொள்ள உள்ளது. மேலும் இந்திய ராணுவ அதிகாரிகள் சிலரையும் சிபிஐ விசாரிக்க உள்ளது. இது தொடர்பாக கூகுள் இந்தியா கூறும்போது, “இது தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். இந்திய சட்டதிட்டங்கள் மற்றும் பாது காப்பு விஷயங்களை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம். தடை தொடர்பான விவரங்கள் எங்களுக்குத் தெரியாது. இதற்கு மேல் தற்போது கூறவிரும்பவில்லை” என்றது.

SCROLL FOR NEXT