சிமி தீவிரவாதிகள் 8 பேரும் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாக அவர்களது குடும்பத்தினர் சார்பில் வாதாட முன்வந்துள்ள வழக்கறிஞர் பர்வேஸ் ஆலம் குற்றம்சாட்டியுள்ளார். தீவிரவாதிகளின் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆராய்ந்த பின் அவர் கூறியதாவது:
தீவிரவாதிகள் அனைவரும் மிக நெருக்கமாக நிற்கும்போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களது தலை மற்றும் மார்பில் தான் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி குற்றவாளிகளை இடுப்புக்கு கீழே தான் போலீஸார் சுட வேண்டும்.
எனவே இது திட்டமிட்ட ரீதியில் போலியாக நடத்தப்பட்ட என்கவுன்ட்டராக தெரிகிறது. சிறையில் உள்ள 20 சிமி தீவிரவாதிகளும் தாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவிடும்படி, உள்ளூர் நீதிமன்றத்தில் முறையிடவுள்ளேன். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக வாதாட முன்வந்திருப்பதால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.