இந்தியா

சுயாட்சி உரிமையை சிதைக்கிறது பாகிஸ்தான்: ஐ.நா. சபையில் இந்தியா சாடல்

பிடிஐ

காஷ்மீர் விவகாரத்தில் சுயாட்சி முறையை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்தி, இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தைத் தூண்டி விடுகிறது என்று ஐநா பொதுச் சபையில் ஐநா-வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி மயங்க் ஜோஷி கடுமையாக பேசினார்.

“பாகிஸ்தான் மக்களுக்கே இத்தனை கால அந்நாட்டு வரலாற்றில் அவர்களுக்கான ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அது தொடர்ந்து காஷ்மீரின் ஒரு பகுதியை ஆக்ரமித்து வருகிறது அப்பகுதி காஷ்மீரை ஒரு காலனியாகவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஆனால், தொடர்ந்து ஜனநாயக முறையில் மக்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் கொண்ட இப்பகுதி காஷ்மீரின் சுயாட்சி உரிமைகள் குறித்து தவறாக பிரச்சாரம் செய்து இதனை ஒரு திரையாகப் பயன்படுத்தி இந்திய மக்கள் மீது பயங்கரவாதத்தை தூண்டி விட்டு வருகிறது” என்று ஐநா பொதுச்சபையில் இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.

சுய நிர்ணய உரிமைக்கான பாகிஸ்தானின் ‘சடங்கார்த்த பரப்புரையை’ சுட்டிக்காட்டிய மயங்க் ஜோஷி, பாகிஸ்தான் தங்கள் நாட்டு மக்கள், தங்கள் சமுதாயம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உன்னிப்பாக கவனித்து சரி செய்ய முயற்சி செய்வதை விடுத்து அண்டை நாட்டின் பிராந்திய பிரச்சினைகளை சரி செய்வதற்காக பேசி வருவது பன்னாட்டு விதிமுறைகளை மீறுவதாகும் என்று மேலும் கடுமையாக சாடினார்.

“இப்போது சர்வதேச நாடுகளே பாகிஸ்தானின் தவறான முயற்சிகளை கவனித்திருப்பார்கள் எனவே நாங்கள் இதில் எங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை” என்றார் மயங்க் ஜோஷி.

தனது பேச்சின் திசையை மாற்றி, தேசிய, மத, பண்பாட்டு, இன சிறுபான்மையினர் மீதான தேவையற்ற விரோதம், சகிப்பின்மை, அகதிகள் மற்றும் புலம்பெயர்வோர் மீதான மனித உரிமை மீறல்கள் ஆகியவை பற்றி பேசினார்.

முன்னதாக பாகிஸ்தானுக்கான ஐநா தூதர் மலீஹா லோதி குறிப்பிடும்போது, காஷ்மீர் விவகாரத்திற்கு சுமுக தீர்வு காணாமல் தெற்காசிய பகுதியில் அமைதியையும் சமாதானத்தையும் எட்ட முடியாது என்றார். அவருக்குப் பதிலடியாகவே மயங்க் ஜோஷி மேற்கண்டவாறு ஐ.நா.வில் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT