பஞ்சாப் சிறையிலிருந்து தப்பிய 6 பேரில் காலிஸ்தான் தீவிர வாதி மின்டூவும் ஒருவர். இவர் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அதிகாரி களுடன் நெருக்கமாக இருந்து இந்து மதத் தலைவர்களைக் கொல் வதற்கான சதித் திட்டத்தில் ஈடுபட்ட தாக போலீஸார் தெரிவித்தனர்.
பல்வேறு நாடுகளில் சுற்றிவிட்டு, போலி பாஸ்போர்ட் மூலம், 2014-ம் ஆண்டு தாய்லாந்தில் இருந்து இந்தியா திரும்பிய மின்டூவை, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பஞ்சாப் போலீஸார் கைது செய்தனர்.
நேற்று பாட்டியாலா-குல்ஹா சீகா சாலையில் போலீஸ் தடுப்பை மீறி வேகமாக ஒரு கார் சென்றுள்ளது. அதனை தடுத்து நிறுத்த முயன்ற போலீஸார் துப்பாக்கியால் சுட்டபோது, பெண் ஒருவர் குண்டடி பட்டு பலியானார். எனினும் கார் நிற்காமல் சென்றுவிட்டது அதில் மின்டூ தப்பியிருக்கலாம் என்று போலிசார் சந்தேகிக்கின்றனர்.
பஞ்சாப் மாநில தேர்தல் நெருங்கும் நிலையில் அமைதியை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்ட மிட்டிருப்பதால், உஷார் நிலை யில் இருக்குமாறு, அண்மையில் நடைபெற்ற டிஜிபிக்கள் மாநாட் டில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்தார்.
ஆனால், இது வெறுமனே மாநில பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயமல்ல, எல்லை தாண்டிய தீவிரவாதிகளின் அட்டூழியம் என, பஞ்சாப் முதல்வரின் ஆலோசகர் வினித் ஜோஷி கூறியுள்ளார்.