திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான நேற்று காலை முத்து பல்லக்கு வாகனத்தில் தாயார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் பத்மாவதி தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 3-ம் நாளான நேற்று முத்து பல்லக்கு வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி வந்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பத்மாவதி தாயாரைத் தரிசித்தனர்.
தொடர்ந்து நேற்று மாலை கோயில் வளாகத்தில் சிறப்பு திருமஞ்சன சேவையும், இரவு கஜ வாகன சேவையும் நடைபெற்றது.