இந்தியா

பெப்சி, கோக் உட்பட 5 குளிர்பானங்களில் நச்சு கலந்திருப்பது கண்டுபிடிப்பு: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

செய்திப்பிரிவு

இந்தியாவில் உள்ள இரு முக்கிய பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் 5 வகையான குளிர்பானங்களில் நச்சுத்தன்மை கொண்ட வேதியல் உலோகப் பொருட்கள் கலந்திருப்பதாக மாநிலங்களவையில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பக்கன் சிங் குலாஸ்தே எழுத்துப்பூர்வ மாக அளித்த பதிலில் கூறியிருப்ப தாவது:

ஸ்பிரைட், மவுண்டெயின் டியூ, செவன்அப், பெப்சி மற்றும் கோகா கோலா குளிர்பானங்களின் மாதரி கள் ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப் பட்டு, கொல்கத்தாவில் உள்ள தேசிய ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ஆய்வில் ஈயம், காட்மியம், குரோமியம் போன்ற நச்சுத்தன்மை கொண்ட வேதியல் உலோகப் பொருட்கள் கலந்திருப்பது கண் டறியப்பட்டது. தேசிய சோதனை மையத்துடன் இணைந்து அகில இந்திய பொது சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையம் இந்த ஆய்வை நடத்தியது.

இவ்வாறு அவர் கூறினார்.

குளிர்பானங்கள், பழரசங்கள், மதுபானங்கள் உட்பட பெட் பாட் டில்களில் அடைத்து விற்கப்படும் பானங்களில் ஊடுருவியுள்ள நச் சுத்தன்மை குறித்து ஆராயும்படி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அகில இந்திய பொது சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT