நாடாளுமன்ற மக்களவையில் நேற்று மத்திய உள்துறை இணை யமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறும் போது, ‘‘பிரதமர் மோடி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நாள் முதலாக காஷ்மீரில் மிகப் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கள்ளநோட்டு புழக்கம், தீவிர வாதிகளுக்குச் செல்லும் நிதிகள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன.
கல்வீச்சில் ஈடுபடுபவர்களுக்கும் நிதி அளிக்க முடியாமல் பிரி வினைவாதிகள் திணறுகின்றனர். காஷ்மீரின் அமைதியை சீர்குலைக்க முயலும் இத்தகைய தீய சக்திகளுக்கு எதிராக சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிரிவினைவாதிகளில் ஒரு சிலர் வெளிநாட்டுக்குச் சென்று, அங்கிருந்தபடி இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.