இந்தியா

சூரத் குண்டுவெடிப்பு வழக்கு: தண்டனை பெற்ற 11 பேரும் விடுவிப்பு

செய்திப்பிரிவு

சூரத் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரை விடுவித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1993-ம் ஆண்டு குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள வாரச்சா பகுதி மற்றும் ரயில் நிலைய நடைமேடையில் நடந்த குண்டுவெடிப்பில் ஆல்பா படேல் என்ற பள்ளி மாணவி உயிரிழந்தார். மொத்தம் 31 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம், குஜராத் மாநில காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் முகமது சுர்தி உள்ளிட்ட 11 பேருக்கு தண்டனை விதித்தது. சுர்தி உள்ளிட்ட ஐந்து பேருக்கு தலா 20 ஆண்டுகளும், மற்றவர்களுக்கு தலா 10 ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டது. உச்ச நீமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனு, நீதிபதி டி.எஸ்.தாக்கூர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரையும் விடுவித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT