இந்தியா

பெற்றோரின் வீட்டில் மகனுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பிடிஐ

“பெற்றோர் சம்பாதித்து கட்டிய வீட்டில் மகனுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை. பெற்றோரின் கருணையால் மட்டுமே அவர்களுடன் மகன் வசிக்கலாம்” என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியை சேர்ந்த வயதான ஒரு தம்பதியர், தங்களுடன் வசிக்கும் இரு மகன்கள் மற்றும் மருமகள்களால் தங்கள் வாழ்க்கை நரகமாகி விட்டதாகவும் அவர்களை தங்கள் வீட்டில் இருந்து வெளியேற்றக் கோரியும் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் பெற்றோருக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதற்கு எதிராக மகன்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இவ்வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதி பிரதிபா ராணி நேற்று உறுதி செய்தார். அவர் அளித்த தீர்ப்பில், “பெற்றோர் தங்கள் சம்பாத்தியத்தில் கட்டிய வீட்டில் மகனுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை.

மகன் திருமணம் ஆனவரா கவோ அல்லது ஆகாதவராகவோ இருந்தாலும் இரு தரப்புக்கும் இது பொருந்தும். பெற்றோர் அனுமதிக்கும் காலம் வரை, அவர் களின் கருணையால் மட்டுமே அவர்களுடன் மகன் வசிக்கலாம். சுமுக உறவு இருப்பதால் மகனை தன்னுடன் வசிக்க பெற்றோர் அனுமதிக்கின்றனர். இதற்கு மகனை காலம் முழுவதும் பெற் றோர் சுமக்க வேண்டும் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT