பந்தை அடிக்கும் எம்.பி மஹூவா மொய்த்ரா. 
இந்தியா

சேலையில் கால்பந்து விளையாடிய திரிணாமுல் எம்.பி மஹூவா மொய்த்ரா: நெட்டிசன்களை ஈர்த்த பதிவு

செய்திப்பிரிவு

கிருஷ்ணாநகர்: சேலை அணிந்தபடி கால்பந்து விளையாடி அசத்தியுள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹூவா மொய்த்ரா. அதனை சமூக வலைத்தள பக்கத்திலும் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார் அவர். இப்போது அது நெட்டிசன்களின் கவனத்தையும் பெற்றுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் அவர். தனது தொகுதியில் நடைபெற்ற ‘கிருஷ்ணாநகர் எம்.பி கோப்பை’ கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு சென்றபோது களத்தில் இறங்கி விளையாடி உள்ளார். அந்தப் படத்தை தான் அவர் இப்போது பகிர்ந்துள்ளார்.

சிவப்பு மற்றும் ஆரஞ்சு ஷேட் கொண்ட புடவையை கட்டிக்கொண்டு, கண்ணில் கூலிங்கிளாஸ் மற்றும் காலில் ஷூ மாட்டிக்கொண்டு விளையாடி உள்ளார். பந்தை அடித்து ஆடும் அட்டேக்கர் ஆகவும், தடுத்து ஆடும் கோல் கீப்பராகவும் அவர் விளையாடி உள்ளார்.

“கிருஷ்ணாநகர் எம்.பி கோப்பை தொடரின் வேடிக்கையான தருணம். ஆம், நான் புடவையை கட்டிக் கொண்டு விளையாடினேன்” என அதற்கு விளக்கமும் அவர் கொடுத்துள்ளார். அதுதான் நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளது. மஹூவா மொய்த்ரா, அவ்வப்போது கருத்துள்ள கருத்துகளையும் பகிர்வார். அது அரசியல் ரீதியாகவும் அனல் பறக்கும் ரகத்தில் இருக்கும்.

SCROLL FOR NEXT