இந்தியா

தமிழக மீனவர்கள் பிரச்சினை: இந்திய கோரிக்கைகளை நிராகரித்தது இலங்கை

செய்திப்பிரிவு

இந்திய, இலங்கை மீனவர் களுக்கு இடையே நீண்டகாலமாக நீடிக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் டெல்லியில் நேற்றுமுன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக இலங்கை அமைச்சர் மகிந்த அமரவீரா கொழும்பு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி ஆழ்கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் இரட்டை மடி, சுருக்கு வலை, இழுவை வலை பயன்படுத்துவதை நிறுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் வழங்க வேண்டும். ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட படகு களை விடுவிக்க வேண்டும். இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் 80 நாட்கள் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் ஆகிய 3 கோரிக்கை களை இந்திய தரப்பு முன் வைத்தது. இவற்றை ஏற்க மறுத்துவிட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்.பி. சுமந்திரன் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “இரட்டைமடி, சுருக்குவலைகளைப் பயன் படுத்தி மீன்பிடிப்பதை நிறுத்தி விட்டால் மற்ற பிரச்சினைகளுக்கு மிக எளிதாக தீர்வு காண முடியும்” என்றார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT