மத்தியப் பிரதேச தலைநகர் போபால் சிறையில் இருந்து தப்பிய சிமி தீவிரவாதிகள் அகில் கில்ஜி, மெகபூப் குட்டூ, முகமது காலித் அகமது, முஜீப் ஷேக், அம்ஜத் கான், ஜாகிர் உசேன், அப்துல் மஜித், முகமது சாலிக் ஆகிய 8 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
எட்டு பேர் மீதும் குண்டுவெடிப்பு, கொலை, கொலை முயற்சி, கொள்ளை உட்பட 23 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் சென்னை குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஜாகிர் உசேன் மீது மட்டும் 12 வழக்குகள் உள்ளன.
போபால் வடக்கு எஸ்.பி. அர்விந்த் சக்சேனா கூறியபோது, 8 தீவிரவாதிகளும் சிறை வார்டனை கொலை செய்துவிட்டு தப்பினர். அவர்களுக்கு எதிரான சாட்சிக்கு இதுவே போதுமானது என்றார். இதனிடையே ம.பியில் எல்லா சிறைகளிலும் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது. அனைத்து சிறை களிலும் மின் வேலி அமைக்க ஆலோ சனை நடத்தப்பட்டு வருகிறது.