இந்தியா

ஏமாற்றம் தருகிறது: இந்திய கம்யூனிஸ்ட் கருத்து

செய்திப்பிரிவு

மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட் பெரிய ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயணக் கட்டண உயர்வால் பொதுமக்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அரசுக்கு கூடுதலாக ரூ. 8 ஆயிரம் கோடி வருவாய் கிடைத் தாலும், தங்க நாற்கர கட்டமைப் புக்கு ரூ. 9 லட்சம் கோடிகளும் புல்லட் ரயிலுக்கு ரூ. 60 ஆயிரம் கோடிகளும் தேவைப்படுகிறது.

அரசு அளிக்கும் முன்னுரிமை களும் கேள்விக்குரியதாக உள்ளது. வளர்ச்சித் திட்டங்களுக்கு அரசு முழுக்க, முழுக்க வெளிநாட்டு நேரடி முதலீடுகளை நம்பி உள்ளது. இதில் தனியார் மற்றும் பி.பி.பி. ஆகியவற்றின் முதலீடுகள் என்பது ரயில்வே துறையை தனியார்மயமாக்கவே வகை செய்யும். பயணிகள் பாதுகாப்பில் குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டிருப்பது தெரிகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT