இந்தியா

ஜாகீர் நாயக் அறக்கட்டளைக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை

செய்திப்பிரிவு

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக் நடத்தி வரும் இஸ்லாமிய ஆய்வு அறக் கட்டளையை (ஐஆர்எப்) சட்ட விரோத அமைப்பாக அறிவித் துள்ள மத்திய அரசு, இந்த அறக்கட்டளைக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் அளித்த ஒப்புதலைத் தொடர்ந்து, இந்தத் தடை விதிக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறும் போது, “மகாராஷ்டிர அரசு மற்றும் மத்திய உளவு அமைப்புகள் பகிர்ந்துகொண்டுள்ள தகவல்கள் அடிப்படையில் ஐஆர்எப் மீது தடைவிதிக்க வலுவான ஆதாரம் உள்ளது” என்று தெரிவித்தன.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2, சிந்துதுர்க் நகரில் 2, கேரளாவில் 1 என 5 காவல் நிலையங்களில் ஜாகீர் நாயக் மற்றும் ஐஆர்எப் உறுப்பினர்கள் மீது வழக்குகள் உள்ளன. ஒசாமா பின்லேடனைப் புகழ்ந்து பேசியது, இந்தியர்களை முஸ்லிம்கள் மதம் மாற்றியிருந்தால் நாட்டில் 80 சதவீத மக்கள் இந்துக்களாக இருந்திருக்க மாட்டார்கள் என்று கூறியது, தற்கொலைப் படை தாக்குதலை நியாயப்படுத்தியது, மெக்கா போல் பொற்கோயில் புனிதத் தலம் அல்ல என்று கூறியது, இந்து கடவுள்களுக்கு எதிராக கருத்துகளைக் கூறியது என ஜாகீர் நாயக்கின் பல்வேறு உரைகளை புலனாய்வு அமைப்பு (ஐ.பி.) திரட்டியுள்ளது.

தீவிரவாதத்தை தூண்டிவருவ தாக சர்வதேச இஸ்லாமிய தொலைக்காட்சியான ‘பீஸ் டிவி’ மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்த டி.வி. நிகழ்ச்சிகளில் இருந்தே ஜாகீர் நாயக்கின் பெரும்பாலான உரைகளை ஐ.பி. திரட்டியுள்ளது.

SCROLL FOR NEXT