கொலீஜியம் பரிந்துரை செய்த 34 பேரை நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள் ளது. இத்தகவலை உச்ச நீதிமன்றத் தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம், கொலீஜியம் பரிந்துரைத்த மேலும் 43 பெயர்களை மத்திய அரசு மறுபரிசீலனைக்காக திருப்பி அனுப்பியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த நீதிபதிகள் நியமனச் சட்டம் ரத்து செய்யப்பட்டதையடுத்து, நீதிபதி களை நியமிக்கும் ‘கொலீஜியம்’ முறையை மேம்படுத்துவதற்கான செயல்திட்டம் ஒன்றை உருவாக் கும்படி மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இந்த திட்டத்தை உருவாக்குவதில் மத்திய அரசுக்கும் உச்ச நீதி மன்றத்துக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற் கிடையே, ‘கொலீஜியம்’ முறைப் படி, நீதிபதிகளை நியமிக்க அளிக் கப்பட்ட பரிந்துரைகள் மீது முடி வெடுக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாக, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. நீதிமன்றங்களை மூடிவிடலாம் என்று நினைக்கிறீர்களா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி யிருந்தனர்.
நிலுவையில் இல்லை
இந்நிலையில், நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி ஆஜராகி, ‘கொலீஜியம்’ பரிந்துரை செய்த 77 பெயர்களில் 34 பெயர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி விட்டது. அவர்களை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை அனுப்பிவிட்டது.
மேலும், 43 பெயர்களை மறு பரிசீலனை செய்யக் கோரி, ‘கொலீஜியம்’ குழுவுக்கு மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இன்றைய நிலவரப்படி, நீதிபதி கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசிடம் எந்தக் கோப்பும் நிலுவை யில் இல்லை. ‘கொலீஜியம்’ முறையை மேம்படுத்துவது குறித்து மத்திய அரசிடம் ஒப் படைக்கப்பட்டிருந்த வரைவுத் திட் டத்தின் திருத்தப்பட்ட பிரதி, ‘கொலீஜியம்’ குழுவுக்கு கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதியே அனுப்பப் பட்டு விட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத்திடம் இருந்து அது குறித்து எந்த பதிலும் வரவில்லை’ என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் இந்த நட வடிக்கை குறித்து, தலைமை நீதிபதி மற்றும் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் வரும் 15-ம் தேதி கூடி விவாதிக்கும் என்று தெரிவித்த நீதிபதிகள், நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழக்கை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.