குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர், இந்திய கடலோர காவல் படையுடன் இணைந்து அரபிக் கடலில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது படகில் 40 கிலோ ஹெராயின் கடத்தி வந்த பாகிஸ்தானியர்கள் 6 பேரை கைது செய்தனர். படம்: பிடிஐ. 
இந்தியா

ரூ.200 கோடி போதைப் பொருளுடன் குஜராத்துக்கு படகில் வந்த 6 பாகிஸ்தானியர்கள் கைது

செய்திப்பிரிவு

அகமதாபாத்: பாகிஸ்தானிலிருந்து குஜராத் வழியாக பஞ்சாப்புக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவுபோலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குஜராத் கடல் பகுதியில், கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜகாவ் கடற்கரையில் இருந்து 33 கடல் மைல்தொலைவில் ஒரு மீன்பிடி படகுநுழைந்தது. உடனே கடலோரகாவல் படையின் அதிவிரைவு படகுகளில், கமாண்டோக்கள் விரைந்து சென்று படகை சுற்றிவளைத்தனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த அந்த படகில் 6 பேர் இருந்தனர். படகில் 40 கிலோ ஹெராயின் இருந்தது. இதையடுத்து பாகிஸ்தானியர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டு, படகுடன் ஜகாவ் கடற்கரை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இது குறித்து குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இந்த ஹெராயின் குஜராத் கடலோர பகுதியில்இறக்கப்பட்டு அங்கிருந்து வாகனம் மூலம் பஞ்சாப் கொண்டுசெல்லப்பட இருந்தது. நாங்கள்அந்த படகை அரபிக் கடலில்இந்திய எல்லைக்குள் இடைமறித்து ஹெராயினை கைப்பற்றி, கடத்தல்காரர்களையும் கைது செய்தோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT