இந்தியா

திப்பு ஜெயந்தியை கண்டித்து போராட்டம்: கர்நாடகாவில் எடியூரப்பா உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது

செய்திப்பிரிவு

மைசூருவை ஆண்ட திப்பு சுல்தானின் பிறந்த நாளை கர்நாடக அரசு முதல்முறையாக‌ கடந்த ஆண்டு கொண்டாடியது. இதே போல இந்த ஆண்டும் திப்பு சுல்தானின் பிறந்த நாளான நவம்பர் 10-ம் தேதியை ‘திப்பு ஜெயந்தி’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் அரசு விழாவாக கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கு பாஜக, விஷ்வ ஹிந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனி னும் திட்டமிட்டபடி திப்பு ஜெயந்தி கொண்டாடப்படும் என கர்நாடக அரசு உறுதியாக தெரிவித்தது.

இதையடுத்து அரசைக் கண்டித்து மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தலைமையில் பெங்க ளூருவில் நடந்த கண்டன பேரணி யில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் சட்டப்பேரவை நோக்கி அவர்கள் பேரணியாக செல்ல முயன்றபோது, எடியூரப்பா, முன் னாள் துணை முதல்வர் அசோக் உட்பட 300-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

மைசூருவில் முன்னாள் அமைச்சர் ஷோபா கரந்தலாஜே தலைமையில் நடந்த கண்டன போராட்டத்தில் பங்கேற்ற குடகு எம்பி பிரதாப் சிம்ஹா, முன்னாள் அமைச்சர் ராம்தாஸ் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதே போல குடகு, பெலகாவி, பீதர், கதக் உள்ளிட்ட இடங்களில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட முயன்ற பாஜகவினரை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் எடியூரப்பா, ‘‘அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 10-ம் தேதி அன்று கறுப்புக் கொடி பேரணி நடத்தவுள்ளோம்’’ என்றார்.

இதன் காரணமாக மைசூரு, குடகு, பெலகாவி, ஹூப்ளி உள் ளிட்ட பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT