இந்தியா

விபத்தில் சிக்கியவர்களுக்கு மக்களவைத் தலைவர் உதவி

பிடிஐ

உத்தரப் பிரதேச ரயில் விபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான உதவிகளை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் செய்துள்ளார்.

இந்தூர் மக்களவை உறுப்பினரான சுமித்ரா மகாஜன், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உத்தரப் பிரதேச ரயில் விபத்து குறித்து கேட்டறிந்தார்.

மேலும் விபத்தில் சிக்கிய ரயிலில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் நேற்று இந்தூர் ரயில் நிலையத்தில் குவிந்தனர்.மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு தனது உதவியாளருக்கு சுமித்ரா உத்தரவிட்டார்.

இதுதவிர, பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவுவதற்காக மேலும் 2 உதவியாளர்களை சம்பவம் நடந்த பகுதிக்கு அனுப்பி வைத்தார்.

SCROLL FOR NEXT