இந்தியா

முஸ்லிம்களின் ஷரியத் சட்டம் முறையாக திருத்தப்பட வேண்டும்: மும்முறை தலாக் வழக்கின் மனுதாரர் ஜக்கியா சோமன் பேட்டி

ஆர்.ஷபிமுன்னா

முஸ்லிம்களின் ஷரியத் சட்டத்தில் முறையான திருத்தங்கள் செய்யப் பட வேண்டும் என பாரதிய முஸ்லிம் மகளிர் போராட்டக் குழுவின் இணை நிறுவனரான ஜக்கியா சோமன் கூறியுள்ளார். மும் முறை தலாக் மற்றும் நிக்காஹ் ஹலாலாவுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் நடைபெறும் வழக்கில் மனுதாரர்களில் ஒருவரான இவர் ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி:

இந்த வழக்கில் உங்கள் அமைப்பும் இணைய வேண்டிய அவசியம் என்ன?

கடந்த ஜனவரி 7, 2014 ல் எங்கள் அமைப்பு முஸ்லிம் பெண் களால் தேசிய அளவில் தொடங் கப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைத்து சமூகப் பெண்களுக்கும் தேவையான உதவிகள் செய்வது, சச்சார் குழு பரிந்துரையை அமல் படுத்தக் கோருவது, கல்வியை பாதியில் விட்ட பெண்களை மீண்டும் தொடர வைப்பது போன்ற பணிகளை இந்த அமைப்பு மூலம் செய்து வந்தோம். அப்போது மும்முறை தலாக்கில் பாதிக்கப் பட்ட பல முஸ்லிம் பெண்கள் எங்க ளிடம் உதவி கேட்டு வந்தனர். அவர்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சி யடைந்து அதை முறைப்படுத்தும் முயற்சியில் இறங்கினோம்.

முஸ்லிம் சட்டம் அறிந்த பெண் களையும் முதல்முறையாக காஜி களாக்கி ஷரியத் சட்டப்படி பிரச் சினைகளை தீர்த்து வருகிறோம். மும்பை, அகமதாபாத், ஜெய்ப்பூர், திண்டுக்கல் ஆகிய 4 இடங்களில் செயல்படும் இந்த ஷரியத் நீதிமன்றங்களில் முதல் வருடம் 267 வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை முஸ்லிம் மவுலானாக்கள் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், முஸ்லிம்களின் பழமையான உலகப் புகழ் பெற்ற மதரஸாவான தாரூல் உலூம் மவுலானாக்கள் பெண்களும் காஜியாகலாம் என ‘பத்துவா’ அளித்தனர்.

தலாக் பற்றி குர்ஆனில் கூறப் பட்டுள்ளது என்ன? நீங்கள் எதிர்க் கும் மும்முறை தலாக்கின் பின்னணி என்ன?

முதல்முறை தலாக் கூறிய பின் விவாகரத்தை தவிர்க்க வேண்டி இருவருக்கும் இடையே சமாதானப் பேச்சுக்கள், சாந்தப்படுத்துதல் உட்பட பல்வேறு முயற்சிகள் எடுக் கப்பட வேண்டும். மூன்று மாத அவகாசத்திற்குள் இம்முயற்சி வெற்றி பெறாவிடில் இரண்டாவது முறை தலாக் கூறி இறுதியாக விலக வேண்டும். இதுதான் ‘தலாக்-எ-எஹசான்’ எனும் பெயரில் குர் ஆனில் கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது முறை தலாக் கூற எந்த இடமும் அளிக் கப்படவில்லை. மேற்கு ஆசியா வின் இரண்டாவது கலிபாவான ஹசரத் உமரின் ஆட்சிக்காலத்தில் எகிப்தில் ஏற்பட்ட ஒரு சமூகப் பிரச்சினையால், அதிக எண் ணிக்கையிலான பெண்கள் தங்கள் கணவன்மார்களை விட்டு விலக விரும்பினர். இதற்காக அவர்கள் ஹசரத் உமரிடம் நீதி கேட்டுச் சென்றனர். அவர் மக்கள் நீதி மன்றம் போல் ஒரு சபையை கூட்டி நவீன முறையில் அவர்கள் கணவன்மார்களால் ஒரே மூச்சில் மும்முறை தலாக் கூறச் செய்து உடனடியாக விவாகரத்து பெற்றுத் தந்தார். அப்போதைய சூழலில் செய்யப்பட்ட இது முழுக்க, முழுக்க ஒரு தற்காலிக ஏற்பாடு ஆகும். இந்த மும்முறை தலாக்கை தவறாகப் புரிந்துகொண்ட சில ஆண்கள் தங்களுக்கு சாதகமாக தொடர்ந்து வருகின்றனர்.

இந்த வழக்கில் உங்கள் முக்கிய கோரிக்கை என்ன?

நாங்கள் குர்ஆனின் அடிப்படை யில் தவறாக பயன்படுத்தப்படு வதை முறைப்படுத்த வேண்டும் என்று கோருகிறோம். மற்ற மதங் களுக்கான சட்டம் அவ்வப்போது திருத்தப்பட்டுள்ளது ஆனால், 1937-ல் ஆங்கிலேயர்களால் அம லாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான ஷரியத் சட்டத்தில் இதுவரை திருத் தங்கள் செய்யப்படவில்லை. அதில் மும்முறை தலாக், பலதார மணம், நிக்காஹ் ஹலாலா, திருமண வயது, பெண்களுக்கு சொத்தில் பங்கு போன்றவை மீது எந்தக் குறிப்புகளும் இல்லை. எனவே, ஷரியத் சட்டத்தை குர்ஆனின் அடிப்படையில் முறை யாக திருத்தம் செய்ய வேண்டும்.

இந்த வழக்கின் மூலம், பொது சிவில் சட்டம் கொண்டு வர மத்திய அரசுக்கு நீங்கள் வாய்ப்பளித்து விட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து?

இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் பொது சிவில் சட்டம் அமலாக்கு வதாக எதுவும் குறிப்பிடவில்லை. மாறாக, இந்திய அரசியல் சட்டப் படி மத உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்றுதான் கூறியுள்ளது. உலகின் மற்ற முஸ்லிம் நாடுகளில் மும்முறை தலாக் பின்பற்றப்படு வதில்லை என்பதால் அதை இங் குள்ள முஸ்லிம்களும் கடைப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியுள்ளனர்.

இதுவரையில் மத்திய அரசு எடுத்துள்ள உண்மையான நிலையை நாம் பாராட்டுகிறோம். அதேசமயம் பொது சிவில் சட் டத்தை வேறு வழிகளில் அரசு கொண்டு வருகிறதா என கண் காணித்து வருகிறோம். அப்படி அவர்கள் முயன்றால் அதை கடுமையாக எதிர்ப்போம். இந்து, கிறிஸ்தவர் உட்பட அனைத்து மதத்தினருக்கும் பொது சிவில் சட்டம் பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT