இந்தியா

வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

செய்திப்பிரிவு

சந்திப்பூர்: தரையில் இருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணையின் ஆறு சோதனைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ-வும், இந்திய ராணுவமும் வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளன. இந்திய ராணுவத்தின் மதிப்பீட்டு சோதனையின் ஒரு பகுதியாக, ஒடிசா கடற்கரைக்கு அருகே சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் இருந்து இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது.

இந்த சோதனைகளின் போது அதிநவீன வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் ஆயுதங்களை துல்லியமாக குறி வைத்து துரிதமாக தாக்கும் நோக்கம் பூர்த்தி செய்யப்பட்டது.

இந்த ஏவுகணை சோதனையின் வெற்றியை அடுத்து டி.ஆர்.டி.ஓ-விற்கும், இந்திய ராணுவத்திற்கும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

துரிதமாக செயலாற்றும் தரையில் இருந்து வானுக்கு ஏவப்படும் இந்த ஏவுகணை, இந்திய ஆயுதப்படைகளின் ஆற்றலுக்கு மேலும் வலுசேர்க்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT