இந்தியா

மிரட்டி பணம் பறித்த வழக்கு: ஆம் ஆத்மி எம்எல்ஏ குலாப் சிங் குஜராத்தில் கைது- பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு கேஜ்ரிவால் கண்டனம்

செய்திப்பிரிவு

மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ குலாப் சிங்கை, டெல்லி போலீஸார் குஜராத்தில் நேற்று கைது செய்தனர்.

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ குலாப் சிங். இவர் மீது மிரட்டி பணம் பறித்த வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது. இந்த வழக்கு தொடர் பான விசாரணைக்கு குலாப் சிங் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் 2 நாட்களுக்கு முன்னர் பிறப்பிக்கப்பட்டது.

குஜராத் ஆத் ஆத்மி கட்சி வளர்ச்சி பொறுப்பாளராகவும் குலாப் சிங் இருக்கிறார். இங்கு சூரத் நகரில் ஆத் ஆத்மி சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. மேலும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் குஜராத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

பொதுக் கூட்டத்தில் மாலையில் கேஜ்ரிவால் உரையாற்ற ஏற் பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், மிரட்டி பணம் பறித்த வழக்கில் டெல்லி போலீஸார் சூரத்திதில் எம்எல்ஏ குலாப் சிங்கை நேற்று காலை திடீரென கைது செய்தனர். அவரை டெல்லி அழைத்து செல் வதற்காக மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கேஜ்ரிவால் கூறும் போது, ‘‘2நாட்களுக்கு முன்னர் குலாப் சிங்குக்கு எதிராக வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், குஜராத் பொறுப்பாளராக உள்ள அவரை டெல்லியில் இருந்து வந்து போலீஸார் கைது செய்துள்ளனர். இது, சூரத்தில் ஆம் ஆத்மி நடத்தும் பொதுக் கூட்டத்தால் பாஜக பதற்றம் அடைந்துள்ளதையே காட்டுகிறது. கூட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்த பாஜக தலைவர் அமித் ஷா முயற்சிக்கிறார். பொதுக்கூட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று அமித் ஷாவை கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில், இது ஆம் ஆத்மி பேரணியோ, கூட்டமோ அல்ல. குஜராத் மக்களின் பேரணி’’ என்றார்.

டெல்லியில் ஆம் ஆத்மி பதவி யேற்ற பிறகு பல்வேறு புகார்களின் கீழ், இதுவரை 13 எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆத் ஆத்மியில் கைது செய்யப்படும் 14-வது எம்எல்ஏ குலாப் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT