இந்தியா

மனோகர் பரிக்கருக்கு எதிராக ஆம் ஆத்மி அவதூறு வழக்கு

பிடிஐ

துல்லியத் தாக்குதல் குறித்த கருத்திற்காக மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கருக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளது.

அனுமானுக்கு அவரது சக்தி என்னவென்று தெரியாது, அதனை நினைவுபடுத்திய பிறகு ஒரே மூச்சில் கடலைக் கடந்தார் அனுமான். அதே போல் சர்ஜிக்கல் தாக்குதலுக்கு முன்னதாக இந்திய ராணுவத்திற்கு அதன் சக்தியை அறிந்திருக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் அக்டோபர் 1-ம் தேதி டெஹ்ராடூனில் ராமாயணத்தை குறிப்பிட்டு இந்திய ராணுவத்தை ஒப்புமையாகப் பேசினார்.

இதற்கு எதிராக ஆம் ஆத்மி அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது, இது குறித்து ஆம் ஆத்மியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் திலிப் பாண்டே கூறும்போது, இந்த கருத்து இந்திய ராணுவத்தை இழிவுபடுத்துவது என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT