இந்தியா

தொழிலதிபரின் மகன்கள் 5 நாட்களுக்கு பிறகு மீட்பு

பிடிஐ

பிஹாரில் கடத்திச் செல்லப்பட்ட, டெல்லி தொழிலதிபரின் 2 மகன்கள் 5 நாட்களுக்குப் பிறகு நேற்று மீட்கப்பட்டனர்.

டெல்லி, பதர்பூர் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் பாபுலால் சர்மா. இவரது மகன்கள் சுரேஷ் சந்திர சர்மா, கபில் சர்மா ஆகிய இருவரும் கடந்த 22-ம் தேதி, பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள சர்வ தேச விமான நிலையத்தில் இருந்து மர்ம நபர்களால் கடத்திச் செல்லப் பட்டனர். இந்நிலையில் ரகசிய தகவலின் பேரில் லக்கிசராய் மாவட்டம், கஜ்ரா காவல் எல்லைக் குட்பட்ட அடர்ந்த வனப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதில் சிறு மோதலுக்குப் பிறகு சகோதரர்கள் இருவரையும் மீட்டனர். இச்சம்பவத்தில் 5 கடத்தல்காரர்கள் கைது செய்யப் பட்டனர். சிலர் தப்பி ஓடிவிட்டனர். சம்பவ இடத்தில் இருந்து 5 கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட வற்றை கைப்பற்றினர். சகோதரர் களை மீட்ட போலீஸாருக்கு பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தக் கடத்தலில் நக்ஸலைட் களுக்கு நேரடித் தொடர்பு இருப் பதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவி்லலை என போலீஸார் கூறினர்.

SCROLL FOR NEXT