நாட்டின் 29-வது மாநிலமாக உருவான தெலங்கானா மாநிலம் 31 மாவட்டங்களாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான மாவட்ட ஆட்சியர்களும் நேற்று நியமனம் செய்யப்பட்டனர்.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தனியாக பிரிந்த தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தை தலைநகரமாக கொண்டு விளங்குகிறது. இதில் 10 மாவட்டங்களாக இருந்ததை, முதல்வர் கே.சந்திரசேகர ராவ், 31 மாவட்டங்களாக விரிவாக்கம் செய்துள்ளார். புதிதாக பிரிக்கப் பட்ட 21 மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நேற்று காலை 11.12 மணிக்கு முதல்வர் கே.சந்திரசேகர ராவ், புதிய மாவட்டங்களில் ஒன்றான சித்திப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் தேசியக் கொடி யேற்றி தொடங்கி வைத்தார். இதேபோன்று புதிய மாவட்டங் களில் அமைச்சர்கள் தேசியக் கொடி ஏற்றி புதிய ஆட்சியர் அலுவ லகங்களை தொடங்கி வைத்தனர்.